இங்கிட்டு தமயந்தி அங்கிட்டு யாரு :
>> Tuesday, 11 January 2011
1.புதுவருடம் ஆரம்பித்து விட்டது. போன வருட இறுதியில் நிறைய எழுத நினைத்து நினைத்து முடியாமல் போய் விட்டது.எத்தனையோ சந்தோஷங்கள்,வலிகள் எல்லாமே பகிரப்படாமல் ஞாபக அடுக்குகளில் இருக்கிறது.சிறுகதைத் தொகுப்பும் இந்த வாரம போல் தயாராகி விடும். எஸ்.ரா மிகவும் அற்புதமான ஒரு முன்னுரை தந்திருக்கிறார்.விஜயன் சாரின் முகவுரை மற்றும் மருதுவின் அட்டைப்படம் பிரமிக்க வைக்கிறது.
புத்தக கண்காட்சியில் ஸ்டால் எண் 42 போதி பதிப்பகத்தில் "வாக்குமூலம்" சிறுகதைத் தொகுப்பு வெள்ளிக்கிழமை கிடைக்கும்.
2.எங்கள் அலுவலகத்தில் பெற்றால் தான் பிள்ளையா என்று ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஹெச்.ஐ.வி பாசிடிவ் குழந்தைகளுக்கு உண்டு.750 ரூபாய் செலுத்தி ஒரு குழந்தையின் மருத்துவக் காப்பீட்டுக்கு உதவலாம். இதற்கு பலர் பங்களிப்பு செய்தாலும் பாளையங்கோட்டை சிறையிலுள்ள கைதி ஒருவர் இதற்களித்த பங்களிப்பு மிக சிறந்ததாக நினைக்கிறேன்.அவர் சிறையில் வேலை செய்து வாங்கியப் பணத்தை இந்தத் திட்டத்துக்காக அனுப்பி இருந்தார். அதன் ஒவ்வொரு துளியிலும் உள்ள ஒப்பற்ற தன்மை மனசை நெகிழ செய்தது. மழை இனியும் பெய்யும். 3.2011ல் தமிழகத்தின் அரசியல் சூழல் மாறும் வாய்ப்பு நிறையவே இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. எந்த ஆட்சி வந்தால் ஜனங்களின் குறைகள் தீர்க்கப்படும் என்று தெரியவில்லை. தன் வளர்ச்சியன்றி மனிதர்களின் பிரச்னைக்காக கட்சிகள் உழைப்பதாகத் தெரியவில்லை. ஒரு இளைஞன் தலைமையில் அமைச்சரவை அமையுமெனில் அதுவே தீர்வாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
4.கேப்டனின் பேச்சு சுவாரஸ்யமாய் இருந்த்து.உச்சந்தலைல அவர் ப்ளீச் பண்ணிருந்தது அவரின் அழகை கூட்டியிருந்தது.தொலைநோக்கு பார்வையில் அவரது அரசியல் காய்களை நகர்த்துவது புரிகிறது. இப்படியெல்லாம் எழுத ஆசையாகத் தானிருக்கிறது.
5.ஆழிப்பதிப்பகத்திலொரு ட்வீட்டர் புத்தகத்தை சிலாகித்து நண்பர் சொன்னார். அது அநேகமாக மிஸ்டர் பேயோனின் புத்தகமாகத் தானிருக்கும் என நம்புகிறேன். வழ்த்துக்கள் மிஸ்டர் பேயோன்.
6.பொங்கலுக்காக ரதவீதிகளில் கரும்பு வியாபாரம் சூடு பிடித்து விட்டது.அதுவே ஒரு வாசத்தையும் நிறத்தையும் சாலைக்குக் கொடுக்கிறது.
7.அடுத்த மாதம் முதல் சென்னை வாசம். சந்தோஷமானதாய் அமைய வேண்டும்.

4 comments:
சென்னைக்கு வேலை மாறி போறீங்களா? வாழ்த்துக்கள்! புது வருடம், புதிய பாதையை காட்டி இருக்கிறது. சூப்பர்!
Keep in touch!
இங்கிட்டு கிருபாநந்தினி, அங்கிட்டு தமயந்திக்காவா? சென்னைப் பக்கம் போனா அங்குள்ள பதிவர் நண்பர்கள் எல்லாரையும் விசாரித்ததாச் சொல்லுங்கக்கா!
h r u., pongal greeting , best wishes for chennai vasam
subrabharathimanian
thank you chitra, kirubha.subrabarathimanian, eppadi irukinga? thank uuu
Post a Comment