முதல் வரியிலேயே பிழையுள்ளதே மிஸ்டர் கமல்...!
>> Friday, 10 December 2010
சிங்கப்பூரில் கமல் கவிதையை தனது திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் த்ரிஷாவோடு சொன்ன விதமும் கர்வமும் மனசை நிறைத்தது.ஆனால் அந்த முதல் வரி உறுத்தலாக இருந்தது. தொடர்ந்த பணிகளில் அந்த வரியை மறுபடி தேடும் வாய்ப்பு என்னை சேரவில்லை.திடீரென வரலெக்ஷ்மி ரூபத்தில் கமலுக்கு வந்தது பிரச்னை. இந்த விடயத்தில் நான் கமல் வரலெக்ஷ்மியைப் பற்றியோ அரங்கநாதன் பற்றியோ பேசக் கூடாதென சத்தியமாக சொல்லவில்லை. மேலை நாடுகளில் ஏசுநாதரை சித்தரித்து வந்த திரைப்படங்களைப் பார்த்தால் இந்த வக்கீல் நோட்டீஸ்கள் சிரித்துக் கொள்ளும்.
மதம் என்பது நம்பிக்கை. நிலா உண்டென்று பகலில் சொன்னால் கூட காத்திருந்து இரவில் நிலாவைக் காட்டலாம். கடவுள்? அது ஆத்திகர்களின் நம்பிக்கை சார்ந்தது.நாத்திகர்களின் கொள்கை சார்ந்தது.
பெண்கள் கலவி பற்றிப் பேசுவது நம் கலாசாரத்துக்கு மிக அந்நியமானது. ஆனால் இங்கு சில்க் ஸ்மிதாக்களும் ஷகீலாக்களும் பிரபலம்.இந்த தளத்தில் கமலின் கவிதையில் பெண் பேசுவது புரட்சியாக இருக்கலாம். ஆனால் கண்ணோடு கண் கலக்கும் பெண்களை களங்கம் உள்ளவளென முதல் வரியிலேயே குற்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ள் முடியாது. கதவோரம் பார்வையை வைத்து பேசிய நம் ஆச்சிமார்களின் கதையை கமலும் அறிந்திருக்கக்கூடும்.வெளியுலகின் சுவாசம் பட்ட எம்குலப் பெண்கள் ஆண்களோடு பயணப்பட்ட திசையில் அவர்களை வீழ்த்த பயன்படுத்தப்படும் பாலியியல் குற்றசாட்டுகள் கமல் அறியாதது அல்ல. சினிமாப் பெண்களின் படுக்கையறை கிசுகிசுக்களை கேட்கும் ஆர்வத்திலேயே எத்தனை பதிவிரதர்களின் ஆண்மை காத்திருக்கிறது.
நேர் கொண்டப் பார்வை என பாரதி சொன்னது போகிற போக்கில் எழுதப்பட்டது அல்ல. நேர்ப் பார்வையின் தன்னம்பிக்கையை யாரும் சந்தேகிக்கவும் முடியாது. பொதுமைப்படுத்தி ஒரு கருத்தை முன்வைக்கும் முயற்சிகளில் நேர்மை மிக அவசியம்.
கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
களங்கப்பட்டவள் யார்? மனதில் களங்கம் உள்ளவளெனில் கண்களை நேராகத் தான் சந்திக்க முடியுமா? ஆதரவின் வெளிப்பாடான ஸ்பரிசத்தின் அர்த்தங்களை சரியாகப் புரிந்து வைத்திருப்பார் என நினைத்திருந்தேன்...அடுத்த வரியை வாசிக்கும் முன். உடனே கைக்கோர்ப்பவள் ஒழக்கம் கெட்டவள் எனில் என் ஒரே கேள்வி..ஒழுக்கங் கெட்டவள் என்பவள் யார்? ஒழுக்கமுறைகள் யாது? அது உடல் சார்ந்ததா?
இது அந்த கதாபாத்திரத்தின் வெளிப்பாடு என்று பதில் சொல்லலாம். அப்படிபெனில் பொதுமைப்படுத்தாதீர்கள்.கலவி என்பது இயல்பானது. அது மனதின் மொழி.அந்த மொழி பெண்களுக்குமானது.
கமலாதாசின் கவிதைகளில் புலப்படும் காமத்தில் உணர்நுட்பம் மிளிரும்.வரலெக்ஷ்மியிடம் கேள்விக் கேட்கக்கூடாதென யாரும் சொன்னால் நான் கமல் பக்கம்.ஆனால் கைக்கோர்ப்பவள் ஒழுக்கங் கெட்டவளெனில்...ஸாரி மிஸ்டர் கமல்..பிழைத் திருத்தியெழுதுக.உங்களால் முடியும்.ஏனெனில் நீங்கள் ராஜலெக்ஷ்மியின் மகன்



8 comments:
சமூதாயத்தில புர்ச்சி பண்றாங்களாம்! :-))
சபாஷ்.. நான் திட்டி எழுத நினைத்தேன்..
அதுவும் கமல் .!!!!!!.. நம்பவே முடியல.
சாராள் டக்கர் குழுமம், கலக்கறீங்க
உண்மைதான் நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வரிகளும் மிகவும் கீழ்மைப்படுத்தும் வரிகள், ஓழுக்கம் பற்றி கமலுக்கு இப்படி ஒரு நினைப்பு இருப்பது ஆச்சர்யமானதுதான், தனது வாழ்க்கையின் தூரத்தில் அவர் உருவாக்கிய கலகங்களைப்பார்க்கும் போது இப்படி ஒரு பிற்போக்கு சிந்தனையோடா தனது முற்போக்கை பேசுகிறார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. என்றாலும் அது கமலின் குரல் அல்ல ஒரு கதாபாத்திரத்தின் குரல் என்கிற நியாயம் வரத்தான் செய்யும்,
பெரியாருக்குப் பேரன், கருணாநிதிக்குக் கைப்புள்ளன்னு தன்னைச் சொல்லிக்கிட்டு, இந்து மதத்துல நம்பிக்கை உள்ளவங்களையெல்லாம் இந்துத்வா வெறியருங்க மாதிரி பேசிக்கிட்டு, வாணியைக் கழட்டிவுட்டுட்டு, சரிகாவை ஓரங்கட்டிட்டு, தோளுக்கு மேல வளர்ந்த ரெண்டு பெரிய பொண்ணுங்க இருந்தும், கல்யாணமாகிக் குழந்தையோட இருக்கிற ஒரு நடிகையோடு ஊர் உலகம் தெரிய தொடர்பு வெச்சுக்கிட்டு இருக்கிற ஒருத்தர் இப்படித்தான் கவிதை எழுதுவாரு. இதுக்கு நீங்க ஏங்க்கா ஏங்கிப் போறீங்க? விடுங்க கழுதைய!
Post a Comment