வந்தவங்க...

வாங்க

காத‌ல் ஒரு போதை ந‌தி

>> Thursday, 21 October 2010

1.அந்நிய‌ ந‌தியாய் பாயுது காத‌ல்
ஒரு எறும்புக்க‌டியாய் ம‌ன‌சுள்...
என்ன‌ செய்ய‌?
காத‌லிக்க‌ தெரிகிற‌து.
காத‌ல் செய்ய‌ தெரிய‌வில்லை....

2.எங்கோ எவ‌ன் கூட‌வாவ‌து
வாழ்ந்து கொள்.
பிள்ளைப் பெற்றுக் கொள்.
ச‌மைத்து துவைத்து பொட்டுக் கொள்
என்னை காத‌லித்து தொலைத்தாயா?
அதை ம‌ட்டும் சொல்லி செல்.

3.காத‌ல் ஒரு போதை ந‌தி
‍நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன் ம‌ட்டுமே
சுழியில் சிக்குகிறான்.

6 comments:

பயணமும் எண்ணங்களும் 21 October 2010 03:53  

காத‌ல் ஒரு போதை ந‌தி
‍நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன் ம‌ட்டுமே
சுழியில் சிக்குகிறான்.

----------



நல்லாருக்கு தமயந்தி...

பயணமும் எண்ணங்களும் 21 October 2010 03:53  

t

Chitra 21 October 2010 06:16  

என்னை காத‌லித்து தொலைத்தாயா?
அதை ம‌ட்டும் சொல்லி செல்.

....சரியான கேள்வி......

♥ RomeO ♥ 21 October 2010 07:32  

\\காத‌ல் ஒரு போதை ந‌தி
‍நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன் ம‌ட்டுமே
சுழியில் சிக்குகிறான்.//


ஆத்தா இந்த செய்தியை இவ்வளவு நாள் யாரும் என்கிட்ட சொல்லவே இல்லையே ..

Tamil Pralayam- தமிழ்பிரளயம் 10 November 2010 05:49  

தோழிக்கு வணக்கங்கள்,
காதல் போதை நதி... தலைப்பே அருமை...

வார்த்தைகள் அனைத்தும் ஈட்டியாய்...இருபாலருக்கும் பொருந்தும் கருத்து...

"எங்கோ எவ‌ன் கூட‌வாவ‌து
வாழ்ந்து கொள்.
பிள்ளைப் பெற்றுக் கொள்.
ச‌மைத்து துவைத்து பொட்டுக் கொள்
என்னை காத‌லித்து தொலைத்தாயா?
அதை ம‌ட்டும் சொல்லி செல்."....

இந்த வரிகளை எனதாக்கி நினைத்தால் மனதின் ரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது...வாழ்த்துக்கள்!!!

வாழ்க வளமுடன்....

ROAD TRAFFIC 7 December 2010 06:00  

போதை நதியின் கிக் ஏறினால்,சுழியில் சிக்கத்தான் செய்வான் அம்மணி !