"படி தாண்டாதே..ஆண்களோடு பழகாதே "
>> Sunday, 10 October 2010
இந்த வார துவக்கத்தில் நெல்லையில் நடந்த ஒரு சம்பவம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாயிற்று.ஒன்பது வயது சிறுமியான மாரியம்மாளை 60 வயது காமூகன் பாலியியல் பலாத்காரம் செய்து சாக்கு மூட்டையில் அவள் உடலை சுற்றி தாமிரபரணி பாலத்திற்கடியில் போட்டிருந்தான். குழந்தையைக் காணவில்லை என்று அவளது அப்பா வெளியூருக்கு கிளம்பி போயிருக்கிறார். செல்போன் கூட இல்லாத குடும்பம். அம்மா ஆடு மேய்க்கப் போன போது அந்த 9 வயது பெண்ணிடம் மிட்டாய் கொடுத்து அந்த காமூகன் கொலை செய்திருக்கிறான்.
பொதுவாக செய்திகளை வாசித்து விட்டு "ஐயோ பாவம்" என்று சொல்லி விட்டு அடுத்த பக்கத்தை திருப்பி விடுவோம். ஒரு நாளின் கடுமையான வேலைப்பளுவில் அதை மறந்தும் விடுவோம். ஆனால் சமீப காலமாய் பெருகி வரும் பாலியல் குற்றங்கள் இப்படி பக்கம் திருப்பியதும் மறந்து விடக் கூடியதாய் இல்லை. அதும் ஒரு பள்ளிசிறுமியை மரணமேற்படும் அளவுக்கு பாலியல் பலாத்காரம் செய்திருப்பது எந்த கோட்பாடுகளாலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
கற்பை கவரிமானை ஒத்ததாய் கருதும் ஒரு சமுதயத்தில் எதனால் இத்த்னை குழப்பங்கள? யோசித்துப் பார்த்தால் தவறான கருத்துக்களை, காலத்தால் தோற்கடிக்கப்பட்ட கருத்துக்களை நாம் இன்னும் சுமந்திருப்பது தான் காரணமெனத் தோன்றுகிறது.பெண்கள் வாசற்படி தாண்டாத காலத்தில் அவர்கள் வளர்ப்புக்காக வடிமைக்கப்பட்ட " படி தாண்டாதே..ஆண்களோடு பழகாதே " கோட்பாடுகள் இன்னும் ஒத்து வருமா? ஆண்கள் வேற்று கிரகத்து ஜந்துகள் என்னும் பார்வையோடே பெண் குழந்தைகளை வளர்க்கப்படுவதும் முக்கியமான காரணம்.
பாலியல் வேறுபாடுகள் களைந்து பணியாற்றும் காலமிது.ஆனால் ஸ்பரிசங்கள் பற்றி தெளிவான எந்த ஒரு பகிர்தலையும் நம் குழந்தைகளுக்கு நாம் அறிவூட்டுவதில்லை.தொலைக்காட்சிகளிலும் சினிமாக்களிலும் தொடுதலின் அர்த்தங்கள் ஆபாசமானதாகவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.நல்ல தொடுதல், மோசமான தொடுதல் என்று தொடுதல்களின் வகைகளை ஏன் நாம் பேச தயங்குகிறோம்?
அறிவியியல்பூர்வமாக குழந்தைகளிடம் ஒரு நண்பனாய் உடலின் ரகசியங்களை நாம் பகிர்ந்து கொண்டிருக்கிறோமா? சட்டென ஒரு தொடுதலில் வேறு அர்த்தங்கள் இருக்கிறது என்பதை குழந்தைகளுக்கு அடையாளப்படுத்தும் கல்வியை இனியாவது நாம் பகிர்ந்து கொள்வோம், தற்காப்புக் க்லைகளாய் பல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறோம். இதை ஏனோ நவீன பெற்றோர்களாய் அடையாளப்படுத்திக் கொள்பவர்களும் தவற் விட்டு விடுகிறார்கள்.
அந்த காமுகன் பற்றி நினைக்கும் போது இன்னும் உடலின் தேவைகளைப் பற்றின புரிதலில் கூட கூட நாம் தெளிவாக இல்லை என்றே தோன்றுகிறது. செக்ஸ் என்பதை நாம் பதினொரு மணி காட்சியாகவே பார்ப்பதால் தான் இத்தனைப் பிரச்னை. அதை அன்பை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக உடலை நாம் பார்க்கும் பார்வை எப்போது நமக்கு வரும்?நம் ஊடகங்கள் எப்போது மனித உணர்வின் மலிவான வெளிப்பாடுகளை நிறுத்தும்?
பெருகும் பாலியியல் பிரச்னைகளை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லையென்றால் பலியாகப் போவது நம் சந்ததி தான். பாலியல் பாடங்களை அறிவியல்ரீதியாக பள்ளிகளில் இணைப்பதே இதற்கு பாலமிடும். இதற்கு எழுந்த காரணமற்ற எதிர்ப்பு இதை படத் திட்டத்தில் சேர்க்காமல் செய்து விட்டது.இனியும் காரணமற்ற கலாசார எதிர்ப்புகளை தெரிவித்தோமானால் தொலந்து போய்க் கொண்டிருப்பது ஒரு தலைமுறையின் நெறிகள் மட்டுமல்ல ..சில பால்ய உயிர்களும்...



8 comments:
;(
நம் ஊடகங்கள் எப்போது மனித உணர்வின் மலிவான வெளிப்பாடுகளை நிறுத்தும்?
........அந்த ஆதங்கம் பலருக்கும் உண்டு.
சிந்திக்க வைத்த கட்டுரை, தொடருங்கள்
அருமையான சிந்தனைக் கட்டுரை
வாழ்த்துக்கள் !
narsim,chitra, kannan,diya...nandri
இப்போ எல்லாம் காலையில பேப்பர் பார்க்கவே பயம்மா இருக்குது. விதவிதமாய் கொலைச் செய்திகள். பச்சிளம் பாலகர்களிடம் பாலியல் பலாத்காரம். மனதை உலுக்கி விடுகிறது.
கட்டுரையை முழுவதுமாக ஏற்றுகொள்கிறேன்.
indraya paliyal sikkal galukku paliyal thodarpa seythigalai udalin udal uruppagalin paliyal thodarpana parunmaiyana vilakkangal ilaya thalaimuraynaridam karpikka padamaiye.
polurdhayanithi
Post a Comment