நகரும் மரண சாசனத்தில்....
>> Friday, 10 September 2010
மூன்றாவது கோப்பைகாப்பி குடிக்கும் போது
தான் அவன் இறந்து போன
செய்தி அலைபேசியில் வந்தது.
கோப்பை முழுதும் ரத்தமாய்
மாறினாலும் குடித்தாக வேண்டும்
மின்விசிறி சுற்றும் தனிமையில்
பேசிக் கொண்டிருக்க இப்போது
என்வசம் ஒரு மரணசெய்தி.
முகத்தில் எவ்வளவு சோகத்தோடு
அவன் மனைவியிடம் பேசுவது
எனபதை முன் தீர்மானிப்பது நலம்.
பேருந்து நிலையங்கள் பக்கமிருக்கும்
கடைகள் தீர்மானிக்கட்டும்
வாங்கும் மாலைக்கான விலையை.
வெறுமையான கண்களை பாதுகாத்துக்
கொள்ளுதல் அவசியம்.
அவனை பற்றி இல்லாத
சேதிகளை சொன்னாலும்
மறுக்க அவனிருக்க போவதில்லை.
நகரும் மரண சாசனத்தில்
நான் காவது கோப்பை காப்பி
குடிப்பதற்குள் ஒரு மரணம் நம்மையோ
அல்லது
நாம் ஒரு மரணத்தையோ கடக்க நேர்கிறது.


13 comments:
சீக்கிரம் - சந்தோஷமான தமயந்தி வெளியே வரட்டும்.
நகரும் மரண சாசனம் காலத்தின் மீது தெளிக்கப்பட்டதொரு கவிதை ஊர்வலம்.
உங்களின் இந்த கவிதையை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்
http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_17.html
பிரமாதம்ங்க..
நல்ல கவிதை. வாழ்த்துகள்!
-ப்ரியமுடன்
சேரல்
அருமையான கவிதைகள்..ரசித்தேன்..
பிரமாதம்.
நல்ல எழுத்து நடை + நல்ல கவிதை.
www.vijisvegkitchen.blgospot.com
என்ன சொல்வதென்று புரியவில்லை
ஒருவிதமான தவிப்புடன்....
மிக அருமையான கவிதை
சித்ரா..நன்றி. இடைவெளிகள் உங்கள் கமெண்டில் கவிதை தெரிகிறது.
மோகஙுமார் மிக்க நன்றி.
அன்பரசன்,சேரல்,அகமது,குமார் ,விஜி, தியா மனமார்ந்த நன்றி
நல்ல கவிதை. வாழ்த்துகள்!
நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நிதானித்து எழுத தொடங்கினால் அருமையாக வசப்படும்.
நல்லா இருக்குங்க.
Post a Comment