ராய‌ல் தியேட்ட‌ரும் உத‌ய‌கீத‌மும்...

>> Thursday, 12 November 2009

1.அப்போது என‌க்கு ப‌த்து வ‌ய‌திருக்கும். எப்போது சினிமா பார்க்க‌ணும்னாலும் அப்பா எங்க‌ளை அசோக் தியேட்ட‌ருக்குத் தான் கூட்டிட்டுப் போவார். என்ன‌ சென்ட்ர‌ல் தியேட்ட‌ர்ல‌ ஓட்டின‌ ப‌ட‌ங்க‌ளை அசோக்கில் ஒரு மாத‌ம் க‌ழித்து போடுவார்க‌ள். சினிமாவுக்குப் போவ‌தென்ப‌து எங்க‌ளுக்கு அப்போதெல்லாம் திருவிழாவிற்குப் போவ‌து போல்.


என்ன‌ டிரெஸ் போட‌ என்ப‌திலிருந்து அம்மாவை ஸ்பெஷ‌லா ப‌ண்ட‌ம் செய்ய‌ சொல்லி கொண்டுப் போவோம்.அங்கு விற்கும் எதையும் சுத்த‌மில்லாத‌ கார‌ண‌த்தால் அம்மா வாங்க‌ விட‌ மாட்டார். பாளை மார்க்கெட் வ‌ழியாக‌ப் போகும் 5ஏ,5பி ப‌ஸ் பிடித்து அன்ன‌ப்பூர்ணா ஸ்டாப்பில் இற‌ங்கி போக‌ வேண்டும். அடுத்த‌ நாள் க்ளாசில் போய் க‌தை எல்லாம் சீன் சீனா ம்யூசிக்கோடு க‌ரெக்ட்டா சொல்லிறுவேன்(அப்ப‌டித் தானே அம்மு,சித்ரா?).


சென்ட்ர‌ல் தியேட்ட‌ர் ந‌ளினியோட‌ அப்பாவோட‌து என்ப‌தால் அவ‌ங்க‌ தான் அசோக் தியேட்ட‌ரையும் வ‌ச்சிருக்காங்க‌ளானு எங‌க‌ளுக்குள்ள‌ ப‌ய‌ங்க‌ர‌ விவாத‌ம்லாம் வ‌ந்திருக்கு. "அப்ப‌டில்லாம் இல்ல‌ப்பா"னு ந‌ளினி எப்ப‌வுமே ம‌றுத்திருக்கா. இப்ப‌ அசோக் தியேட்ட‌ர் இல்லை. அந்த‌ப் ப‌க்க‌ம் போகும் ச‌ந்த்ர்ப்ப‌மே இல்லாத்த‌னால‌ அது க‌ல்யாண‌ம‌ண்ட‌ப‌மா, ப்ளாட்டா மாறிறுச்சானு என‌க்குத் தெரிய‌வில்லை.

சென்ட்ர‌ல் தியேட்ட‌ர்ல‌ இப்ப‌ "ப‌ருவ‌ கும‌ரி " ப‌ட‌மெல்லாம் போடுறாங்க‌. அப்ப‌ப்ப‌ எம்.ஜி.ஆர் ப‌ட‌ம்.


ரெண்டும் தான் த‌மிழ்நாட்டுல‌ இப்ப‌ வ‌ரைக்கும் ஓடுது?

2.ரெட்டை மேம்பால‌த்துக்கு கீழ‌ பால‌ஸ் ‍டி ‍வேல்ஸ் தியேட்ட‌ர் இருக்கும். டிக்கெட் கொடுக்கிற‌ வ‌ரைக்கும் கேட் திற‌க்க‌ மாட்டாங்க‌.அப்புற‌மா அங்கிட்டு இருக்கிற‌ க‌ண்ண‌ன் சிலைக்கு மாலை போடுவாங்க‌. அப்ப‌ ஒரு சைர‌ன் அடிக்கும். உட‌னே டிக்கேட் கொடுக்க‌ ஆர‌ம்பிச்சிடுவாங்க‌.விய‌ட்நாம் வீடுங்கிற‌ ப‌ட்த்துக்கு ப‌த்மினி ரொம்ப‌ அழ‌கா இருப்பாங்க‌னு கூட்டிட்டுப் போனாங்க‌.எங்க‌ ம‌துரை வெனி சித்தி ப‌த்மினி ப‌த்தி பேசிக்கிட்டே இருந்தாங்க‌. இன்ட்ர‌வ‌ல்ல‌ என் த‌ம்பி விவி அவ‌ங்க‌ளைப் பார்த்து "ப‌த்மினி ப‌த்மினினு சொன்னீங்க‌ளே !அவ‌ங்க‌ எப்ப‌ வ‌ருவாங்க‌?"னு கேட்டான்.

ப‌ட‌ம் பூராவும் சிவாஜி ஜோடியா ப‌த்மினி அழுது க‌ண்ணீர் விட்ட‌தை அவ‌ன் நினைத்துக் கூட‌ப் பார்க்காத‌தை நான் ப‌த்மினியை அவ‌ங்க‌ளோட‌ மைலாப்பூர் இல்ல‌த்துல‌ பேட்டிக்காக‌ ச‌ந்தித்த‌போது நினைத்தேன்."கால்ல‌ 3 மெட்டி போட்டிருகியேம்மா?"என்று கேட்ட‌ ப‌த்மினியிட‌ம் அன்பு ம‌ட்டுமே இருந்த‌து."என‌க்கு லிப்ஸ்டிக்னா உசிரு"என்று சிறுகுழ‌ந்தையாய் சிரித்து மேக்‍க‌ப் கிட்டில் இருந்த‌ 250க்கும் மேற்ப‌ட்ட‌ ப்ராண்டை காட்டினார்.

இப்ப‌ பால‌ஸ் டி வேல்ஸ் தியேட்ட‌ர் ப‌ண்டார‌விளை நாடார் மாவுக‌ட்டு போடும் இட‌மாகி விட்ட‌து.காலை ஆறு ம‌ணிக்கு கீழே விழுந்த‌,சுளுக்கிய‌ வ‌லியோடு ம‌னித‌ர்க‌ள் கூடுகிறார்க‌ள்.


ஆனால் அந்த‌ க‌ண்ண‌ன் சிலை இப்போது அங்கில்லை.


3.உத‌ய‌கீத‌ம் ப‌ட‌ம் வ‌ந்த‌போது எங்க‌ள் வீட்டுக்கு எங்க‌ள் அத‌தை வ‌ந்திருந்தார். என் அத்தைப் பெண் ராஜாத்தியைக் கூட்டிக் கொண்டு உத‌ய‌ கீத‌ம் ப‌ட‌ம் பார்க்க‌ ராய‌ல் தியேட்ட‌ருக்குப் போனோம். ராய‌ல் தியேட்ட‌ருக்கு ரெண்டு வாச‌ல் உண்டு.ஒன்று ர‌த‌வீதி வ‌ழியாக‌. ம‌ற்றொன்று நைனார் குள‌ம் வ‌ழியாக‌. ப‌ட‌ம் பார்த்து விட்டு நைனார் குள‌ம் வாச‌ல் வ‌ழியாக‌ ப‌ஸ் ஏறுவ‌தால் அது கிட்ட‌த்த‌ட்ட‌ வீட்டின் புழ‌க்க‌டை மாதிர்யே ஆயிற்று.


உத‌ய‌கீத‌ம் ப‌ட‌த்துல‌ இன்ட்ர‌வ‌லுக்கு முன்னால‌ ரேவ‌தி மோக‌னை க‌த்தியால‌ குத்துவாங்க‌. ராஜாத்தி அவ்வ‌ள‌வா ப‌ட‌ம் பார்த்த‌தில்லை. ப‌டார்னு "ஐயோ குத்திட்டாளே"னு க‌த்திட்டா. ப‌ட்டுனு விள‌க்குலாம் இன்ட்ர‌வ‌ல்ங்கிர‌துனால‌ போட்டுட்டாங்க‌. அவ‌ளுக்கு ரொம்ப‌ வெக்க‌மா போயிருச்சு. ஒரு வார‌மா அவ‌ளை இதை சொல்லியே வீட்டுல‌ அழ‌ வ‌ச்சோம்.

கொஞ்ச‌ வ‌ருஷ‌ம் க‌ழிச்சு ம‌வுன‌ ராக‌ம் ப‌ட‌த்தை ஒரு 7,8 வாட்டி ராய‌ல் தியேட்ட‌ர்ல‌ பார்த்திருக்கேன்.ஆனா இப்ப‌ தியேட்ட‌ரை அடைச்சிட்டாங்க‌. போத்தீஸ் அதை வாங்கிட்ட‌தாக‌ கூட‌ வ‌த‌ந்திலாம் வ‌ந்துச்சு. எது உண்மைனு தெரில‌.

சிவ‌ச‌க்தி டாக்கீஸ்ல‌,அப்புற‌மா லெக்ஷ்மி டாக்கீஸ்ல‌ அந்த‌ கால‌ம் இங்லீஷ் ப‌ட‌ங்க‌ளை போடுற‌துனால‌ ச‌த்ய‌ம் தியேட்ட‌ர் ரேஞ்சுல‌ காண்பிச்சிப்பாங்க‌.அவ‌ங்க‌ ஸ்கீரின் தூக்குற‌ப்ப‌ போடுற‌ ம்யூசிக்கே ப‌ய‌ங்க‌ர‌ அப்பீஷா இருக்கும்.இப்ப‌ பேரின்ப‌விலாஸ் தியேட்ட‌ர்ல‌ போடுற‌ பாப்கார்ன் ம்யூசிக் முன்னால‌ சிவ‌ச‌க்தில‌ போட்ட‌து தான்.


சிவ‌ச‌க்தில‌ பிட் ப‌ட‌ம் போட்டு அப்ப‌ப்ப‌ போலீஸ் கேஸ் ஆச்சுனும் லெக்ஷ்மில‌ அந்த‌ மாதிரிப் ப‌ட‌ங்க‌ள் போடும் ஓட்ட‌ முடிய‌ல‌னு லீஸ்ல‌ விட‌ முடிவு ப‌ண்ணி பூட்டிப் போட்டிருக்காங்க‌னும் சொல்லிக்கிறாங்க‌. உண்மையானு தெரில‌.

லெக்ஷ்மி தியேட்ட‌ர் தாண்டுற‌ப்ப‌ ம‌ட்டும் புன்ன‌கை ம‌ன்ன‌ன் ப‌ட‌த்துக்கு முத‌ல் நாள் ஷோவுக்கு வ‌ந்து கூட்ட‌த்துல‌ அடிச்சிப் பிடிச்சு டிக்கெட் வாங்கின‌து ம‌ன‌சுல‌ ஓடினாலும்-

பூடிய‌ க‌த‌வுக‌ளுக‌ளோடு அமைதியாக‌ லெக்ஷ்மி தியேட்ட‌ர் க‌ட‌க்கிற‌து.

25 comments:

நையாண்டி நைனா 12 November 2009 00:48  

இப்போ எனக்கும்... அந்த நினைவலைகள் வந்து போனது...

தமயந்தி 12 November 2009 00:55  

நன்றி நைனா..

Mohan Kumar 12 November 2009 01:11  

நல்ல பதிவு. உதய கீதம் பகுதியின் ஆரம்பத்தில் சில எழுத்து பிழைகள். தயவு செய்து திருத்தவும்.

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com
எமது blog-ல் சமீபத்திய பதிவு: அடுத்த வீட்டு பெண் - சிறு கதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை. முடிந்தால் வாசித்து கருத்திடுக

DXB 12 November 2009 01:26  

romba arumaiaga irunthathu ezhuthu nadai. 2 Theatres miss pannittinga poornakala, royal. Any way back to memories.

ராமலக்ஷ்மி 12 November 2009 01:40  

பழைய படங்களே போட்டாலும் எப்போதும் நல்ல படங்களுக்கு உத்திரவாதம் பாலஸ் டி வேல்ஸ்!

செந்தழல் ரவி 12 November 2009 01:55  

:) good post. voted

துபாய் ராஜா 12 November 2009 01:57  

சென்ட்ரல் தியேட்டர்ல பழைய நடிகர் படங்களெல்லாம் அழகா பிரேம் பண்ணி மாட்டி இருப்பாங்களே.....

பூர்ணகலா,பார்வதி,ரத்னா தியேட்டர் பத்தியெல்லாம் ஒண்ணும் எழுதலை...

நம்மூர் தியேட்டர்களை பற்றி கலாப்ரியா சார் நிறைய பதிவுகள் எழுதியிருக்காரு....
http://kalapria.blogspot.com

அமிர்தவர்ஷினி அம்மா 12 November 2009 02:04  

வாசிக்க இதமா இருக்கு இந்தப் பதிவு.

இன்றைய கவிதை 12 November 2009 02:40  

//லெக்ஷ்மி தியேட்ட‌ர் தாண்டுற‌ப்ப‌ ம‌ட்டும் புன்ன‌கை ம‌ன்ன‌ன் ப‌ட‌த்துக்கு முத‌ல் நாள் ஷோவுக்கு வ‌ந்து கூட்ட‌த்துல‌ அடிச்சிப் பிடிச்சு டிக்கெட் வாங்கின‌து ம‌ன‌சுல‌ ஓடினாலும்-
//

ரொம்பவும் உண்மை!

எனக்கும் இதே போன்ற அனுபவங்கள்
சென்னையிலே உண்டு!

-கேயார்

Sivaji Sankar 12 November 2009 03:15  

கேப்டன் பிரபாகரன் பேரின்ப விலாஸ்-ல பாத்தேன்...
இப்போ தான் ஞாபகம் வருது....

குப்பன்.யாஹூ 12 November 2009 04:17  

நெல்லை திரை அரங்குகள் மிக சிறப்பானவை.

பாளை அசோக் திரை அரங்கம் எங்க இருந்துச்சு எனக்கும் ஏரியா மறந்தே போச்சு

செந்தில்வேல் செல்வம் (வருஷம் பதினாறு) ஞாபகம் இருக்கு.

ராயல் திரை அரங்கில் நான் பார்த்து ரசித்த படங்கள், மைகேல் மதன காம ராஜன், கிழக்கு வாசல், தெய்வ வாக்கு, என் உயிர் தோழன்., ஜென்டில் மான் (1st show morning, முதல் டிக்கெட் நான், இரண்டாம் டிக்கட் என் நண்பன் கருங்குளம் ஸ்ரீதர்), ஊமை விழிகள், உரிமை கீதம்

சென்ட்ரல் திரை அரங்கில் அபூர்வ சகோதர்கள் பதினெட்டு or ஒருபது முறை பார்த்து இருப்பேன் (அதில் பதினைந்து முறை இரவு இரண்டாம் காட்சி), நாயகன் -24 முறை பாத்திருப்பேன், படின்மூட்ன்று முறை என் கூட அருள் இளங்கோ, பணகுடி ravi, வெற்றி விழா, கலைஞன்.

பேரின்பவிலசில் முதல நாள் புன்னகை மன்னன், அப்புறம் அஞ்சலி, தளபதி.கரகாட்ட காரன்

பூர்ணகலாவில் பிரம்மா நாற்காலி கனவுகள்.

பாபுலர் (கநேசில் ) ராஜாதி ராஜ், அவ்வை ஷண்முகி,

அருனகிரியில் அமரன், சூரியன், இணைந்த கைகள், kuruthi punal

ரத்னாவில் வருஷம் பதினாறு, என் ஜீவன் பாடுது, குணா

பார்வதியில் உன்னால் முடயும் தம்பி, அக்னி நட்சத்ரம், இடயத்தை திருடாதே

இவை போக பேட்டை மீனாக்சி, சேரை ரத்னா, கல்லிடை சக்தி, சிங்கை தைசீநிஸ்.

கல்யாணி சுரேஷ் 12 November 2009 05:31  

எனக்கு சென்ட்ரல் தியேட்டர் ரொம்ப பிடிக்கும்ங்க. பூர்ணகலா, கணேஷ் ( பாப்புலர் ) பார்வதி, ரத்னா, அருணகிரி எல்லாம் விட்டுட்டீங்களே?

Chitra 12 November 2009 07:32  

முதல் நாள் படம் பாத்துட்டு வந்து மறு நாள் வகுப்பில் கதை சொல்ல எவ்வளவு போட்டி இருந்தது? ஜாலியான memoriesப்பா.
இந்த வருடம், ஊருக்கு வந்த போது, ஏனோ central theater நிலைமையை பாத்து, "எப்படி இருந்த தியேட்டர், இப்படி ஆயிட்டு" என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

Anonymous 12 November 2009 08:26  

இந்த வாரம் மட்டும் நான்கைந்து பதிவுகளில் இடிக்கப்படும் திரையரங்க வரலாற்றை படித்து விட்டேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள். அலுப்பு தட்டி விடும் என்பதால் என் அனுபவத்தை நான் எழுதவில்லை.

goma 12 November 2009 09:59  

பாலஸ் டி வேல்ஸில் அந்த ஜெமினி பொம்மைகள் குழலூதிக்கொண்டிருக்குமே அது இன்னும் இருக்கிறதா...இல்லை பண்டார விளநாடார் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் மாவு கட்டு தயாரிக்க பொம்மையை பொடித்து விட்டாரா...[அவரது வைத்தியத்தில் முட்டைகரு,மையாய் அரைத்த பாக்கு இரண்டும்தான் முக்கிய தேவை..நேரில் பார்த்திருக்கிறேன்.அப்பாவுக்கும் அண்ணன் மகளுக்கும் அவரது சிகிச்சைதான் .]

அக்பர் 12 November 2009 10:12  

ஊர் ஞாபகத்தை தூண்டி விட்டீர்கள்.

ஒரு காலத்தில் ராயல் தியோட்டரில்தான் சவுண்ட் நல்லா இருக்கும்.

பாலஸ் டி வேல்ஸ் ல படமெல்லாம் பார்த்திருக்கீங்க, நான் கட்டு போடத்தான் போயிருக்கேன்.

thamizhini 12 November 2009 11:30  

Naam elloerum saerndhu paarththa NAYAGAN,vahupputh thoezhigaL anaivarum saerndhu paarththa KAAKKI CHATTAI......ummmmm....ummmmm..enna sollattum? Chedihalidam,pookkalaip parippadharkkaahavoe alladhu avattrai vettuvadharkkaahavoe aruhil poehum pozhudhu ..they shudder...endruJAGADISH CHANDRA BOSE solliyirukkiraar. Paalya kaalaththil nammoedu kooda irundha nammudaya indha uravinarhalum,andha JCBkkal aruhil varum pozhudhu thudiththiruppaarhaloe????????? ennaip poruththavarai-they are not made of bricks alone..vandhu poenavarhaL anaivarudaya moochchukkaatrum ingae ulaviyirukkum..sometimes i go with my camera to shutter a construction which is to undergo a death(i"ll like it 2b called that way)aanaal enna seidhaalum u can capture only the ECTODERM of it...kaalam thanadhu raatchasak kaihalaikkkondu iththahaya sila thavirkka mudiyadha alangaarangalai seidhu kondaeiruppaaL..-naam paeraasayudan irukkum varai..BUDHDHAN kooda"AASAYAE PADAK KOODADHU ENDRU AASAIP PATTAVAN" thaanae???-naamellaam engae poeha?-ammu..

ராமலக்ஷ்மி 12 November 2009 18:57  

@ கோமா,

//முட்டைகரு,மையாய் அரைத்த பாக்கு//

ஆமாம் பத்து போடுவதற்கு. அப்புறம் கால் பிரண்டால் சிவப்புத் தைலம் தடவி அவித்துக் கட்டுவாரே மஞ்சணத்தி இலை. அதை மறந்துட்டீங்களே:)?

duraipandishivakkumar 12 November 2009 19:28  

ennakum palaya ninaivugl kannil vandhu poiyiana.
eg;
royal-apoorvasagotharagal,pudhunellu pudhu nathu
central-palavana paravaigal,kodiparakudhu
sivasakthi-vetrivizha
poornakala-pudhiyapadhai
selvam-puhupudhuarthangal,varusham 16

mikka nandri palaya ninaivugalai meendum ninaika oru vaippukku.

duraipandishivakkumar

தமயந்தி 12 November 2009 19:46  

மோக‌ன் குமார்... உதய கீதம் பகுதியின் ஆரம்பத்தில் சில எழுத்து பிழைகள். தயவு செய்து திருத்தவும்.
..க‌ண்டிப்பாக‌!!!

டிபிஎக்ஸ்...பூர்ண‌க‌லா இப்ப‌ மினிம‌ம் ப‌ட்ஜெட் ப‌ட‌ம் போட்டு இப்ப‌ பிர‌ப‌ல‌மாயிருச்சு:சுப்பிர‌ம‌ணிய‌புர‌ம், நாடோடி..

ராம‌லெக்ஷ்மிக்கா..உண்மை தான் க்கா...அந்த‌ சிக‌ப்பு டானிக் மாதிரியான‌ ம‌ருந்து இன்னும் ப‌ண்டார‌ நாடார் வைத்திய‌த்துல‌ இருக்கு.

நன்றி ர‌வி

தமயந்தி 12 November 2009 19:53  

சென்ட்ரல் தியேட்டர்ல பழைய நடிகர் படங்களெல்லாம் அழகா பிரேம் பண்ணி மாட்டி இருப்பாங்களே.....ஆமாம் ம‌ற‌ந்துட்டேன் துபாய் ராஜா..


அமித்து அம்மா...ந‌ன்றி...


கேயார்...பின்னூட்ட‌த்துக்கு ந‌ன்றி..(இன்றைய கவிதை )

சிவாஜி ச‌ங்க‌ர்...கேப்ட‌ன் பிர‌பாக‌ர‌ன் போட்ட‌ பிவிடி இல்ல‌ இப்ப‌..ந‌ல்லா ஆக்கிட்டாங்க‌ தியேட்ட‌ரை.

குப்ப‌ன்.. பின்னூட்ட‌மாய் த‌னிப்ப‌திவே போட்டுட்டீங்க‌ளே

தமயந்தி 12 November 2009 19:56  

க‌ல்யாணி.. இப்ப‌ சென்ட்ர‌ல் தியேட்ட‌ர் ப‌ராம‌ரிப்பு இல்லாம‌ல் இருக்கு.

சித்ரா.. அதுவே..

கோமாக்கா.. இப்ப‌ பால‌ஸ் டி வேல்ஸ் வெறும் மாவுக‌ட்டு மைதான‌ம் ம‌ட்டுமே

அக்ப‌ர்... அட‌...இப்ப‌ பாம்பே தான் ச்வுண்ட்ல‌ கிங்..

அம்மு.. நாய‌க‌ன் ப‌ட‌ம் பார்த்த‌ அன்று தான் என் முத‌ல் க‌தை விக‌ட‌ன்ல‌ வெளியாச்சு இல்ல‌.. நீயும் நானும் அதை ப‌ற்றி பேசிக்கிட்டே டிக்கெட் க‌வுண்ட‌ரில் நின்ற‌து ஞாப‌க‌ம் வ‌ருது.

துரைப்பாண்டி அண்ணா.. ந‌ன்றி ...

ஷங்கி 12 November 2009 20:06  

ஊர் நினைவை மீட்டி விட்டீர்கள்!! 5A, 5B, பள்ளிக்குப் போன பேருந்துகள், அருமை!

thamizhini 13 November 2009 01:19  

asai pottuk kondae irukkiradhu indha MAADU...

goma 13 November 2009 04:18  

இந்த பதிவுக்குப் பின்னூட்டம் இட்டவர்களைப் பார்த்தால் அத்தனையும் தாமிரபரணி தண்ணி குடிச்சு வளந்தங்க மாதிரி இருக்கே.....

Designed & Maintained by