வந்தவங்க...

வாங்க

என்னைப் பற்றி

>> Saturday, 21 March 2009

கணந்தோறும் பிறக்கிறேன்
கணந்தோறும் மரிக்கிறேன்
காற்றுக்க்குள் வடிவாகிறேன்

மணம் தோறும் மணக்கிறேன்
மலர் தோறும் சிரிக்கிறேன்
மாற்றின்றி நிகராகிறேன்

குணம் தேடிச் சிணுங்காமல்
கூப்பிக் கை வணங்காமல்
கூட்டத்தில் தனியாகிறேன்

தினம் தோறும் மனம் தேற
தொடுவானுக்கு அருகாகத்
தொலைதூரம் நான் போகிறேன்


படித்தது ஆங்கிலம்; பிடித்தது தமிழ். எழுதியது சிறுகதைகள் நாவல்கள். எழுதப்படாத கவிதைகள் ஏராளம் இன்னும் உள்ளே இருக்கின்றன. என் எழுத்துக்கள் யாரையும் காயப்படுத்தியதில்லை என்னைத் தவிர.
படிக்கும் போது வாங்கிய தங்க மெடல்களைவிட எழுதும் போது கிடைத்த வசவுகள் என்னைப் பெருமிதப்பட வைத்திருக்கின்றன. எந்தப் பயனும் இல்லாத தபால் தலை சேகரிப்பது சிலருக்குப் பொழுது போக்கு; எந்தப் பயனும் எதிர்பாராமல் அன்பைச் சேகரிப்பது என் போக்கு. இங்கே எழுதுவதும் அதற்காகத்தான். என்றாலும் ஓர் எச்சரிக்கை: என் எழுத்தோ,மெளனமோ என்றேனும் ஓர் நாள் உங்களைக் கிழித்து விடவும் கூடும்.

என் சொற்களை நீங்கள் வாசித்திருக்கக் கூடும். என் குரலை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். என்றாலும் என் மனதின் ராகங்களும் ஆத்மாவின் பாடலும் இன்னும் அறியப்படாதவை



- அன்புடன், 
மாலன்

11 comments:

ஆ.முத்துராமலிங்கம் 21 April 2009 07:44  

நல்லா இருக்குங்க
இன்னும் எழுதுங்க

velu sundar 21 April 2009 09:48  

good

take care

eerththathil 22 April 2009 00:29  

தோழிக்கு வணக்கம்..

மாலன் எழுதி உங்களுக்கு அளித்திருக்கிறாரா? சிறப்பு..

என்ன அழகா எழுதி இருக்கிறாஅர் பாருங்கள்.. அவரின் புன்னகை அழகைப் போலவே...

Anonymous 5 May 2009 06:19  

henny is that u-this is ammu

தமயந்தி 6 May 2009 04:10  

ammu...epadida irukuuu

cm 11 May 2009 06:57  

நீங்க நல்லா எழுதுறிங்க உங்கள ஏன் இப்ப டிவி ல பாக்க முடியாரதுள்ள.

cm 16 May 2009 12:03  

அன்புள்ளவர்களுக்கு எல்லோரும் ஈழ தமிழர் பிரச்சனையை அரசியல் சுய லாபத்திற்காக தான் பயன்படுத்துகிறார்கள் என்பது பாமரனுக்கும் தெரியும். ஆனால் மக்களே எதாவது பேசினாலும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போடும் இந்த தமிழக அரசு உள்ள வரை இலங்கை தமிழ் சகோதர்கள் படும் அவலத்தை நியூஸ் இல பார்த்து விட்டு அடுத்த நமிடம் மானாட மயிலாட பார்க்கும் கேடு கேட்ட மனிதர்களாகவே இருப்போம். இந்த தேர்தலிலாவது தமிழன் தன்னுடியா என்னத்தை பிரதிபலிப்பான் என்று பார்த்தல் அதிலும் ஏமாற்றம் தான்.கடைசி தமிழன் சாகும் வரை தமிழின தலைவர் தந்தி கொடுத்து கொண்டே தான் இருப்பார். அவர் பேரன் தொலை தொடர்பு சாதனைகளில் அவருக்கு பயன்படுவது தந்திஉம் கடிதமும் தான். அவர் குடும்பதினருக்கு எதாவது வேண்டும் என்றல் செல்போனிலும் நேரிலும் போதும் அவர் தமிழர் நலனுக்கு மட்டும் கடிதம் எழுவது இன்னும் யாரை ஏமாற்றவோ தெரியவல்லை. அவர் என்ன சொன்னாலும் செய்தலும் நம்புவதற்கு இந்த தமிழன் இருக்கும் வரை அவர் தான் அடுத்த முதல்வர். அடக்ற்கும் நாம் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கயும் ஆடி பாடி மகிழ்ந்தும் கொண்டாடுவோம்.

cm 16 May 2009 12:07  

மன்னிக்கவும். முந்திய பதில் திரு சீமான் அவர்களின் கடிதத்துக்கு எழுதிய பதில் ஆகும்

Muthu 28 May 2009 02:17  

சிரமேற்று செய்திருக்கிறீர்கள் , நன்று , வாழ்க வளமுடன்.

Pravin Krish 5 June 2010 08:05  

எந்தப் பயனும் இல்லாத தபால் தலை சேகரிப்பது சிலருக்குப் பொழுது போக்கு; எந்தப் பயனும் எதிர்பாராமல் அன்பைச் சேகரிப்பது என் போக்கு.


arumai..........

ameer abbas 20 August 2010 02:13  

உங்கள் வலைத் தளம் சிறப்பாக உள்ளது. குறிப்பாக நினைவுகள் அருமையாக உள்ளது.